மட்டக்களப்பின் பிரபல சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன இன்று  அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

 

இன்று அதிகாலை வீட்டின் ஜன்னல்கள் வழியாக உள் நுழைந்து அலுமாரியில் இருந்த சுமார் பத்து பவுண் தங்க நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.