(எம்.மனோசித்ரா)
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் புகைப்படம் , விருப்பு இலக்கம் காட்சிப்படுத்தப்படக் கூடாது என்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியிருப்பது பக்கச்சார்பாக செயற்படுவதைப் போன்றதாகும். இதன் மூலம் தனவந்தர்களால் மாத்திரம் பாராளுமன்றத்தை நிரப்புவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வாய்ப்பளிக்கின்றதா என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அஜித் பி.பெரேரா கேள்வியெழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வேட்பாளர்களது புகைப்படம் மற்றும் விருப்பு இலக்கம் என்பவற்றை பதாதைகள் சுவரொட்டிகள் மூலமே இலகுவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும். இது செலவு குறைந்த முறைமையுமாகும். ஆனால் தற்போது இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொலைக்காட்சி அல்லது வானொலி அலைவரிசை மூலமே பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தொலைக்காட்சிகளில் புகைப்படம் , விருப்பு இலக்கத்துடன் விளம்பரத்தை பிரசுரிப்பதற்கு 10 - 15 செக்கன்களுக்கு இலட்சக்கணக்கில் செலவாகும். அதே போன்று வேட்பாளரின் பெயரைக் கூறி விருப்பு இலக்கத்தை வானொலிகளில் ஒலிபரப்புவதற்கும் இவ்வாறே கட்டணம் அறவிடப்படும். தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டு வருபவர்களுக்குக் கூட இது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். புதிதாக தேர்தலில் களமிறங்குபவர்களுக்கு எம்மை விட பாரிய பாதிப்பு ஏற்படும்.
ஆனால் பண வசதியுடையவர்களுக்கு இது பிரச்சினையல்ல. இவ்வாறு தொலைக்காட்சி , வானொலிகளில் விளம்பரங்களை வழங்குபவர்கள் நிச்சயம் சட்ட ரீதியான முறையில் நிதிப்புலக்கமுடையவர்களாக இருக்க முடியாது. நேர்மையாக செயற்படுபவர்களுக்கு அந்தளவு பாரிய நிதி வசதிகள் இருக்காது.
ஆணைக்குழுவின் இந்த தீர்மானத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமல்ல. அனைத்து கட்சிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதற்கான தீர்வு காணப்படவில்லையெனில் தனவந்தர்களுக்கு மாத்திரம் பக்கசார்பாக ஆணைக்குழு செயற்படுவதைப் போல் ஆகிவிடும். பெரும் பண பலம் உடையவர்களால் மாத்திரம் பாராளுமன்றத்தை நிரப்புவதற்கு ஆணைக்குழு வாய்ப்பளிக்கிறதா ?
இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மையை நாம் விமர்சிக்கவில்லை. மாறாக இந்த தீர்மானத்தின் பாரதூர பாதிப்பையே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM