இவ்வுலகில் பெரும்பான்மையாக உள்ள ஓ, ஏ, பி, ஏபி என நான்கு இரத்த பிரிவுகளில் ஏனைய இரத்த வகையினரை விட ‘ஏ ’ரத்த வகையினரைச் சார்ந்தவர்களை கொரோனா வைரஸ் எளிதாக தொற்றுகிறது என்று ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எனவே உங்களின் இரத்த பிரிவு ‘ஏ’ என்றால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதித்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிற்கு இதுவரை ஏறக்குறைய ஐந்து லட்ச மக்கள் பலியாகியிருக்கிறார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ‘ஏ ’பிரிவு இரத்த வகையைக் கொண்டவர்களை அதிகளவில் தாக்கியிருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அதே தருணத்தில் ‘ஓ’ இரத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மிககுறைவான அளவில் தான் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஒவ்வொருரின் குருதியிலுள்ள சிவப்பணுக்களின் மேற்பகுதியிலுள்ள புரதங்களின் மூலம் உங்களின் இரத்த பிரிவு ஏ, பி, ஏபி மற்றும் ஒ என வகைப்படுத்தப்படுகிறது. இதில் ‘ஓ’ இரத்தவகையினருக்கு சில புரதங்கள் ‘வெளிக்காரணிகள்’ என்று அடையாளம் காண்கிறது. அதனால் கொரோனா வைரஸ் கிருமிகள் சுவாசப்பாதையின் வழியாக உள்ளே நுழையும் போது, இவை அயல் புரதக்காரணிகள் என்று இனங்கண்டு அழிக்க போராடுகிறது. ஆகவே ‘ஓ ’இரத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறைவு என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதை எடுத்துரைத்த விஞ்ஞானிகள், அதற்காக ‘ஓ’ இரத்த பிரிவைச் சார்ந்தவர்கள் சற்று அலட்சியமாக இருந்தால், அவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள். அத்துடன் ஏ இரத்த பிரிவுடையவர்கள் தற்போது அரசு பரிந்துரைக்கும் முக கவசத்தை அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை உறுதியாக பின்பற்றி, உங்களின் ஆரோக்கியத்தை கொரோனா வைரஸ் தொற்று தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
-டொக்டா ஆர்த்தி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM