(செ.தேன்மொழி)
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி செயலணியில் தமிழரோ,முஸ்லிமோ நியமிக்கப்படாமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இம்ரான் மஹ்ரூப் , இனவாதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம் கருணா அம்மானின் ஊடாக மீண்டும் இனவாத செயற்பாடுகளை தூண்ட முற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாது செயற்திறன் அற்ற அரசாங்கமாக பெயர் பெற்றுக் கொண்டுள்ளது.
நியமனங்கள் உட்பட சலுகைகள் வரை அரசாங்கம் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 5000 ரூபாவை சலுகையாக பெற்றுக் கொடுத்தாலும் , அதனை நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் ஊடாக மீண்டும் அறிவிட்டுக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாக மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மீதான நம்பிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது.
தமிழர் சுதந்திர ஐக்கிய முன்னணியின் தலைவரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனுக்கு தேசியப்பட்டியலில் அனுமதி கொடுப்பதாக அரசாங்கம் அழைப்பு விடுத்ததாகவும் , அவர் அதற்கு நன்றி தெரிவித்து விட்டு , தேர்தலில் போட்டியிடவிருப்பதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு தடவைகள் இவ்வாறு இவர்கள் தேசியப்பட்டியலில் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளதுடன் , மூன்றாவது தடவையாகவும் அவருக்கு அழைப்புகிடைக்கப்பெற்ற போதே தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கருணா அம்மான் உரையாற்றுகையில் 2000 - 3000 வரை இராணுவத்தினரை ஒரே இரவில் தான் கொலைச் செய்ததாக கூறியுள்ளார்.
நாடுபூராகவும் பேசு பொருளாக இது தற்போது மாறியுள்ளது. இந்நிலையில் இனவாதத்தின் ஊடாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அரசாங்கத்தின் இனவாதத்தை தூண்டும் இன்னொரு செயற்பாடா இதுவென எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்துக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சி செயலணியிலும் தமிழரோ , முஸ்லீமோ உள்வாங்கப்படாமை மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
இதனால் மேற்படி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். இதேவேளை திருகோணமலை பகுதியிலுள்ள மக்களின் காணிகள் முறையற்ற விதத்தில் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியே இனங்களுக்கிடையிலான பாதுகாப்பு தொடர்பிலும் , அடிமட்டத்திலான மக்களின் நலன் தொடர்பிலும் முன்னுரிமைக் கொடுத்து செயற்படும் கட்சியாக விளங்குகின்றது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM