மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளதோடு, தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மெக்சிக்கோவின் தென்கிழக்கு மாநிலமான ஓக்ஸாக்காவில் உள்ள க்ரூசிட்டா அருகே மையப்பகுதி இருந்து, சுமார் 700 கிலோமீற்றர் (430 மைல்) தொலைவில் உள்ள மெக்ஸிக்கோ நகரத்திற்கு வெகு தொலைவில் அதிர்ச்சி அலைகள் உணரப்பட்டுள்ளன.
அங்கிருந்த குடியிருப்பாளர்கள் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி வீதிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுகத்தினால் இப்பகுதியில் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 30 வீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வைத்தியசாலை மற்றும் பழைய தேவாலயங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ஆரம்பத்தில் மூன்று மீற்றர் உயரமுள்ள அபாயகரமான அலைகள் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிலோமீற்றருக்குள் எங்கும் தாக்கக்கூடும் என்று தெரிவித்தது.
இது மெக்சிக்கோ, மத்திய மற்றும் தென்னாரிக்காவின் பசிபிக் கடற்கரையை பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM