(ஆர்.யசி)

இலங்கை மத்திய வங்கியின் நாணயசபை வெற்றிடத்தை நிரப்ப ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள பெயர்கள் குறித்து ஆராய முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் அரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகின்றது.

இலங்கை மத்திய வங்கி நாணயசபையின் இரு அதிகாரிகள் வெற்றிடத்திற்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டியுள்ள காரணத்தினால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இரு அதிகாரிகளின் பெயர்களை முன்மொழிந்துள்ளார்.

இது குறித்து ஆராயவே அரசியல் அமைப்பு பேரவை இன்றைய தினம் புதன்கிழமை கூடுகின்றது.

எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்  கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 06 மணிக்கு  சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடும் இந்த கூட்டத்தில் பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக அரசியல் அமைப்பு பேரவையின்  செயலாளரும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.