விஷாலின் ‘சக்ரா’ பட புதிய டீசர் வெளியீடு!

23 Jun, 2020 | 10:44 PM
image

விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘சக்ரா’ படத்தின் புதிய டீசர் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் எம். எஸ். ஆனந்தன் இயக்கத்தில், நடிகர் விஷால் நடிப்பில், தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சக்ரா’. இப்படத்தில் விஷாலுடன் நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, நடிகர்கள் மனோபாலா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஷாலின் சக்ரா ட்ரைலர் Glimpse ரிலீஸ்!

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசைமைத்திருக்கிறார்.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் படத்தின் புதிய டீசர் நேற்று இணையத்தில் வெளியானது.

இப்படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாகவும், கம்ப்யூட்டர் ஹேக்கராகவும் இரு வேறு வேடங்களில் நடித்திருக்கிறார் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தை விஷாலின் சொந்த பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியாவதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். 

Chakra (2020) Movie: கதை, நடிகர்கள் மற்றும் ...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right