முல்லைத்தீவில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கபாலி குழு எனப்படும் குழுவின் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீடுகளை உடைத்து கொள்ளையிடுதல், மதுபோதையில் பெண்களிடம் சேஷ்டை செய்தல், வீதிகளில் செல்வோரை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளையும் சிறிய ரக கத்தியொன்றையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.