உலகக்கிண்ணத்தை பார்க்கச்சென்ற மஹிந்தவா ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டார் : மஹிந்தானந்த வெளிப்படுத்த வேண்டும் என்கிறது தேசிய பிக்கு முன்னணி

By T. Saranya

23 Jun, 2020 | 08:20 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபவில்லை என்றால் போட்டியை பார்க்கச்சென்ற மஹிந்த ராஜபக்ஷ்வா இதனை மேற்கொண்டார் என்பதை மஹிந்தானந்த அளுத்கமகே நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருக்கின்றார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் என்றவகையில் இதனை பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் பகிரங்கமாக கூறியிருந்தார். உலகக்கிண்ண போட்டி இடம்பெற்று 9வருடங்களுக்கு பின்னர் தற்போது ஏன் இதனை தெரிவிக்க வேண்டும் என்று அவரை கேட்கின்றோம்.

அத்துடன் இந்தியாவுடன் இடம்பெற்ற இந்த போட்டியை கண்டுகளிப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்ததுடன் இலங்கையில் இருந்து அன்று ஜனாதிபதியாக இருந்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகேயும் சென்றிருந்தனர். போட்டியில் இலங்கை அணி தோல்யுற்றபோதும் அதுதொடர்பில் பாரியளவில் விமர்சனங்கள் அன்று எழவில்லை.

ஆனால் போட்டி இடம்பெற்று 9 வருடங்களுக்கு பின்னர், அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே, உலகக்கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக பொறுப்புடன் தெரிவிப்பதாக பகிரங்கமாக கூறியிருக்கின்றார். அத்துடன் ஆட்ட நிர்ணயத்துக்கும் போட்டியில் விளையாடி வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

வீரர்கள் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடவில்லை என்றால் போட்டியை கண்டுகளிக்கச்சென்ற தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வா ஆட்ட நிரணயத்தில் ஈடுப்பட்டார் என மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் கேட்கின்றோம். அதனால் ஆட்ட நிர்ணயத்துடன் சம்பந்தப்பட்டவர்களை அவர் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு இல்லை என்றால் இந்த குற்றச்சாட்டுக்கு பிரதான குற்றவாளியாகுவது பிரதமர் மஹிந்த ராஜக்ஷவாகும். அத்துடன் இதன் உண்மைத்தன்மையை நாட்டுகுக்கு வெளிப்படுத்தும் பொறுப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கும் இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44
news-image

வெளிநாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 17 கொக்கெய்ன்...

2022-09-29 13:38:08
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47
news-image

நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரகசிய திட்டம் தீட்டிய...

2022-09-29 11:23:39