1991ஆம் ஆண்டிலிருந்து உலகப் புகழ்பெற்ற செக் நிறுவனமான Volkswagen  குழுமத்திலிருந்துவரும் ŠKODA  விரைவில் IWS Holdings கம்பனிக்கு முழுமையாக சொந்தமான IWS Automobiles (Pvt) Ltd  இன் கீழ் உத்திகோகபூர்வமாக இலங்கைக்கு வரவிருக்கிறது.

ŠKODA1895ஆம் ஆண்டில் சைக்கிள்களை தயாரித்ததன் மூலமும் 1905ஆம் ஆண்டில் முதலாவது காரை தயாரித்ததன் மூலமும் அதன் இயங்குநிலை பயணத்தை ஆரம்பித்தது. அதிலிருந்து 2018ஆம் ஆண்டில் மட்டும் 1.24 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து ŠKODA  ஐரோப்பாவின் மிக்க வெற்றிகரமான கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது.

மாதிரி வகையறா 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து முன்-கொள்வனவுக் கட்டளைகளுக்கென தயாராக இருக்கும் நான்கு வகையறாக்களில் மேல்நோக்கி திறக்கும் பெரிய பின்கதவுகளைக் கொண்ட FABIA வகையறார, sedan வகையறாவில் SUPERB மற்றும் SUV வகையறாவில் KODIAQ, KAROQ ஆகியன அடங்குகின்றன.

அனைத்து மாதிரி வகையறாக்களிலும் 1400cc இயந்திர சக்தியையும் 7 ஆசனங்களையும் கொண்ட KODIAQ அதிசிறப்பானதாகும்.

இலங்கையில் இவர்களது பங்காண்மையாளர்களாக IWS ஆகிய நாம் தெரிவு செய்யப்பட்டமை குறித்து பெருமை அடைகிறோம். இலங்கை மோட்டார் வாகன சந்தை வாடிக்கையாளர்களுக்கு IWS சிறந்த விருப்பத் தேர்வான ஒன்றாக அமையுமென நாம் நம்புகிறோம்.

தங்கள் வாகன கொள்வனவுகள் குறித்து தீர்மானம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் இப்பொழுதுரூபவ் உயர்தரத்தைக் கொண்ட ஐரோப்பிய வாகனங்களை கட்டுபடியான விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என்று IWS Holdings தலைவர் திரு. ஆர்தர் சேனநாயக்க தெரிவிக்கிறார்.

IWS Holdings பற்றி…..

1980ஆம் ஆண்டில் நான்கு தசாப்தகால வரலாற்றுடன் ஸ்தாபிக்கப்பட் IWS Holdings செயலாற்றலில் ஒரு பன்முக ஜாம்பவானாக விளங்குகிறது. மோட்டார் வாகனத் துறை, விமானப் போக்கு வரத்து, தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம்,  பண்ட- கசாலைப் பணிரூபவ் போக்குவரத்து, உணவு பதனிடல், பொதியிடல்,

கைத்தொழில், வெகுஜன ஊடக வணிகத் துறைகள் ஆகியவற்றில் இருபது சுயாதீன நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. IWS Holdings அதன் மோட்டார் வாகன துறையில் Eurocars (Pvt) Ltd  இன் கீழ் Porsche AG of Germany ஐ பிரதிநிதித்துவப் படுத்தியும் Eurocars (Pvt) Ltd  இன் கீழ் ஜேர்மனியின் Porsche AG ஐ பிரதிநிதி- த்துவப் படுத்தியும் Swedish Cars (Pvt) Ltd. இன் கீழ் Volvo cars of Sweden ஐ பிரதிநிதித்துவப் படுத்தியும்

உத்தியோகபூர்வ முகவராக செயற்படுவதில் IWS Holdings  பெருமை அடைகிறது.

IWS Holdings  குழும தலைவர் திரு. ஆர்தர் சேனநாயக்கரூபவ் கூட்டாண்மை விவகார பணிப்பாளர் திரு. திமித்ரி செறிவ், பணிப்பாளர் செல்வி அனிகா சேனநாபயக்க, பணிப்பாளர் திருமதி அலெக்சான்றியா சேனநாயக்க ஆகியோரால் வழிநடத்தப்பட்டு

நிருவகிக்கப்படுகிறது. 1895ஆம் ஆண்டில் மோட்டார் வாகனத் துறையின் முன்னோடி யுகத்தில் இந்த வருடம் 125வது வருட பூர்த்தி கொண்டாடப்படும்வேளை உலகிலேயே இது நீண்டகால கார் உற்பத்தி நிறுவனமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. தற்போது 9 பிரயாணிகள்-கார் தொடர்கள CITIGO, FABIA, RAPID, SCALA, OCTAVIA, SUPERB  KAMIQ, KAROQ  மற்றும் KODIAQ   ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் வழங்கி வருகிறது.

› 2019ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் வாடிக்கையாளர்களுக்கு 1.24 மில்லியன் வாகனங்கள்

விநியோகிக்கப்பட்டுள்ளன.

› 1991ஆம் ஆண்டிலிருந்து Volkswagen குழுமத்திற்கு சொந்தமானது. Volkswagen  குழுமம் உலகிலேயே மிகவும் வெற்றிகரமான வாகன தயாரிப்பாளர்களாவர். Volkswagenஇந்த குழமத்துடன் இணைந்து வாகனஙய்களையும் எஞ்ஜின்கள்ரூபவ் மின்மாற்றி போன்ற கருவிகளையும் தயாரித்து வருகின்றது.

› செக் குடியரசில் மூன்று இடங்களில் பிரதானமாக குழம பங்காண்மைகள் ஊடாக இயங்கும் தயாரிப்பாளர்கள் சீனாரூபவ் ரஷ்யாரூபவ் சிலோவாக்கியா, இந்தியா மற்றும் உக்றேன், கசாக்ஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளுர் பங்காளிகளுடன் செயற்பட்டு வருகிறார்கள்.

› உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 42,000 பேர் பணிகளில் ஈடுபடுத்தப்ப்பட்டுள்ளார்கள்.100க்கும் அதிகமான சந்தைகளில் இவர்கள் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்.

› ŠKODA AUTO செயல்நுட்பத்தின் ஒரு அம்சமாக அதிசிறந்த இயக்க தரவுகளுக்காக பாரம்பரியகார் தயாரிப்பாளரிடமிருந்து Simply Clever  கம்பனிக்கு மாற்றுவதற்கு கம்பனி முனைப்புடன்ஈடுபட்டு வருகிறது.