(எம்.மனோசித்ரா)

மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து நடைமுறை செய்யும் சுரக்ஸா  மாணவர் காப்புறுதி திட்டத்தின் கீழ் இவ்வருடம் மே மாதம் 31  திகதி தொடக்கம் பயன்களை செலுத்துவது  இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்படும்.  

அதன் படி காப்புறுதி பயனுக்காக பிழையின்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும் உரிய ஆவணங்களையும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன பிரதான காரியாலயம் அல்லது இலங்கை எங்கும் உள்ள யாதேனும் கிளைக்கு நேரில் அல்லது தபாலில் ஒப்படைக்கலாம்.

இது குறித்த மேலதிக விபரங்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபணத்தின்  0112357357 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது சுரக்ஸா சேவைக்காக ஒதுக்கப்பட்ட விசேட தொலைபேசி இலக்கம்  0112319015, 0112319016 அல்லது 0112319017 என்ற இலக்கங்களுக்கு அழைத்து பெற்றுக்கொள்ள முடியும்.