விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தன்னால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாக காரணத்தை அறிவித்துள்ளார்.

சுகவீனம் காரணமாக சி.ஐ.டி.யில் ஆஜராக முடியாதென தனது சட்டத்தரணி ஊடாக விநாயகமூர்த்தி முரளிதரன் சி.ஐ.டி.க்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணா அம்மான் தான் ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தினரைக் கொன்றதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தெரிவித்த கருத்திற்கு எதிராக பலரும் பல கோணங்களில் கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கருணா அம்மானிடம் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.