ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் ஒகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் யோசித்து வருகின்றனர். ஜுலை 15 ஆம் திகதி படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ரஜினி அமெரிக்காவில் இருந்து இன்று திரும்பி வருவார் என்றும், அவர் வந்தபிறகு படத்தை ஜுலை 22 ஆம் திகதி வெளியிடலாம் என படக்குழுவினர் பரிசீலித்து வந்தனர்.

ஆனால், தற்போது ஜுலை 22 ஆம் திகதியும் படத்தை ரீலீஸ் செய்யாமல் ஒகஸ்ட் மாதத்திற்கு படத்தின் ரீலீஸை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஒகஸ்ட் 12 ஆம் திகதி ‘கபாலி’ படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கபாலி’ படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அன்றைய திகதியில் வெளியிட முடிவு செய்திருந்த விக்ரமின் ‘இருமுகன்’, விக்ரம் பிரபுவின் ‘வாகா’ ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.