மட்டக்களப்பில் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை - மதுரங்கேனிக் குளம் ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.  

மீன்பிடிப்பதற்காக ஆற்றுக் சென்ற 29 வயதான குறித்த இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார். 

இதேவேளை, வாகரை - காயங்கேனி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். 

வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் மேலும் சிலருடன் கடலுக்கு நீராடச் சென்ற வேளையே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.