Ceylinco Life இன் ஆயுட் காப்புறுதி முதல்வர்களது மெகா ஊக்குவிப்பு திட்டமான “குடும்ப சவாரி 9” இல் அதிஷ்ட வெற்றியாளர்களான 5 காப்புறுதிதாரர்களின் குடும்பங்கள் ஜேர்மனிக்கான நான்கு நாள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர்.
பரிசுகளை வென்றெடுத்த 21 பேரும் Ceylinco Life நிறுவனத்தின் செலவில் குடும்ப சவாரி நட்சத்திரமான சஞ்ஜீவனி வீரசிங்கவுடன் BMW அரும்பொருள் காட்சிச்சாலைக்கு விஜயம் செய்து Zugspizo மலை உச்சியில் பகல் போசனம் அருந்தியதுடன் Neuschwanstein அரண்மனைக்கும் விஜயம் செய்த பின்னர் கடைத்தெருக்களை ஒரு நாள் பார்வையிட்டு பொருட்களையும் வாங்கினர். Ceylinco Life குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டத்தின் 2016ஆம் ஆண்டு வரிசையில் ஜேர்மன் விஜயம் உச்சக் கட்டமாக அமைந்தது. இந்த வரிசையில் மற்றும் 60 காப்புறுதிப் பத்திரதாரர் குடும்பங்கள் ஏற்கெனவே டுபாய்க்கும் சிங்கப்பூருக்கும் அழைத்துச் செல்லப்பட்டதோடு மேலும் 500 குடும்பங்கள் Leisure World theme park இற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக களித்தனர்.
ஆயுட் காப்புறுதி வழங்கலை அதிகரித்து காப்புறுதிப் பத்திரங்களை ஒழுங்காக பேணுவோருக்கு பரிசுகளை அளித்து வரும் நிலையில் Ceylinco Life இன் குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டம் இலங்கை காப்புறுதித் துறையில் மிகப் பெரும் ஊக்குவிப்புத் திட்டமாக கருதப்படுகிறது. இந்த வருட குடும்ப சவாரித் திட்டத்தில் Ceylinco Life இலிருந்து மொத்தம் 2,260 பேர் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்று வரை இத்திட்டத்தினால் மொத்தம் 17,000 பேருக்கும் அதிகமானோர் அனுகூலம் பெற்றுள்ளனர்.
சிறியந்த மென்டிஸ், சஞ்ஜீவனி வீரசிங்க, றொஷான் ரணவண அவரது மனைவி குஷ்லானி ஆகியோர் Ceylinco Life இன் குடும்ப சவாரி திட்டத்தில் கம்பனி பேராளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இலங்கையின் ஆயுட் காப்புறுதித் துறையில் 2004ஆம் ஆண்டிலிருந்து சந்தை முன்னோடியாக விளங்கி வரும் Ceylinco Life ஒழுங்கு முறையாக பேணப்பட்டு வரும் சுமார் ஒரு மில்லியன் ஆயுட் காப்புறுதிகளை வழங்கியுள்ளது. உற்பத்தி ஆய்வு, அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழில்சார் விருத்தி, கம்பனி சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் உள்ளூர் காப்புறுதித் துறையில் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதுப்புது திட்டங்களுக்காக பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM