எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்குரிய விண்ணப்பங்களில் 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 14,15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.