குருநாகல்,  நாரம்மல பகுதியில் நீரோடையொன்றில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில்,  நாரம்மல பகுதியை சேர்ந்த 47 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீரோடையொன்றில் குளிக்கச் சென்ற குறித்த நபர்  சுமார் 80 அடி ஆளமான கற்குழி ஒன்றில் சிக்குண்ட நிலையிலேயே  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை  மீட்பதற்கு கிராமவாசிகள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காததையடுத்து இன்று காலை கடற்படையினர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.