பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் உள்ளிட்ட 03 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹங்வெல்ல, எம்புல்கம பகுதியில் வைத்து இன்று கைது செய்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான  இந்து என்றழைக்கப்படும் இந்துனில் குமாரவின் உதவியாளரான (அக்கு) புத்திக ஜயதிலக்க என்பவர் உள்ளிட்ட மூன்று பேரையே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இவ்வாறு கைது செய்யதுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே மூன்று சந்தேகநபர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது சந்தேகநபர்களிடமிருந்து கூரான ஆயுதங்கள் நான்கும், போலி துப்பாக்கியொன்றும், 325 கிராம் கேரள கஞ்சாவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.