வவுனியா கற்குளம் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத விசமிகளால் இன்று (22.06.2020) அதிகாலை எரியூட்டபட்டுள்ளது. 

குறித்த வாகன திருத்தகம் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அதிகாலை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் பழுது பார்பதற்காக நிறுத்திவைக்கபட்டிருந்த 6 மோட்டார் வண்டிகளை தீயிட்டு எரித்துள்ளனர்.   

குறித்த விடயம் தொடர்பாக வாகன திருத்தகத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டநிலையில், அவரால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.  

இந்நிலையில்,முறைப்பாட்டிற்கமைய சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.