நேற்று சனிக்கிழமை இங்கிலாந்தின் ரீடிங் நகரிலுள்ள போர்பரி பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என இங்கிலாந்து பொலிஸார் இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து இங்கிலாந்து பயங்கரவாத தடுப்பு பொலிஸ் பிரிவு தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய நபர் கைரி சாதல்லா என தெரிவித்துள்ள பொலிஸார் அவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதே வேளை குறித்த நபர் லிபியாவிலிருந்து இங்கிலாந்திற்கு  அகதியாக வந்துள்ள நிலையில்   இங்கிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய உள்ளுர் பிரஜையான 25 வயதுடைய நபரொருவரை கைதுசெய்துள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் நேற்று அறிவித்திருந்ததுடன்  இது ஒரு பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக நோக்கவில்லையெனினும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

UK police: Park Stabbings That Killed 3 Was Terror Attack | Voice ...