இந்திய - சீன எல்லை மோதல் : ஐ.பி.எல். ஒப்பந்தம் மீளாய்வு!

21 Jun, 2020 | 08:09 PM
image

இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பல்வேறு அனுசரணை ஒப்பந்தங்கள் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கு ஐ.பி.எல். ஆளுநர் சபை இவ்வாரம் கூடி ஆராயவுள்ளது.

ஐ.பி.எல். போட்டிக்கான தலைப்பு (டைட்ல் ஸ்பொன்சர்) அனுசரணையாளர் உட்பட பிரதான அனுசரணை நிறுவனமான விவோவுக்கு சீன உரிமையாளர் அல்லது சீன தொடர்பு இருப்பதே இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளமைக்கான முக்கிய காரணம் எனத் தெரியவருகின்றது.

இந்தய பிராந்தியமான லெஹ் எல்லையில் சில தினங்களாக பதற்றம் நிலவிவருவதுடன் 15ஆம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவம் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டுள்ளது.  

அந்த சம்பவத்தில் தனது இராணுவத் தரப்பில் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உட்பட 20 துருப்பினர் கொல்லப்பட்டதாக இந்திய அரச தெரிவித்துள்ளது.

சீன கையடக்கத் தொலைபேசி நிறுவனமான விவோ, 2015இல் முதல் தடவையாக ஐ.பி.எல்.லின் தலைப்பு அனுசரணையாளர்களாக இரண்டு வருடங்களுக்கு கைச்சாத்திட்டது. 2017இல் மீண்டும் ஐ.பி.எல்.லுடன் இணைந்த விவோ, ஐந்து வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இதனை முன்னிட்டு 345 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்த நிறுவனம் செலுத்தியிருந்தது.

அத்துடன் பேடீஎம் (Pயலவஅ) என்ற நிறுவனத்துடன் மத்தியஸ்தர்களின் அனுசரணையாளர்களாக 2018முதல் 2022வரை ஐ.பி.எல். ஒப்பந்தம் செய்திருந்தது. பெருந்தொகைப் பணம் அனுசரணையாக வழங்கப்பட்டபோதிலும் அந்தத் தொகை வெளியிடப்படவில்லை.

இந்த நிறுவனத்தில் பிரதான முதலீட்டாளர்கான அலிபபா, ஒரு சின ஈ-வர்த்தக நிறுவனமாகும்.

ஐ.பி.எல். அனுசரணை ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யவுள்ளதாக டுவீட் பண்ணியிருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, அந்த ஒப்பந்தங்கள் எவை என்பதை வெளியிடவில்லை.

விவோவுடனான தற்போதைய அனுசரணை ஒப்பந்தம் நீக்கப்படமாட்டாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பொருளாளர் அருண் துமல் வெள்ளியன்று தெரிவித்து ஒருநாள் கழித்து இந்த புதிய தகவல் நேற்று வெளியானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிச்...

2024-06-22 19:31:12
news-image

விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஐ.சி.சி. இரட்டை வேடம்...

2024-06-22 16:33:52
news-image

கண்டி ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தில் ஆயிரத்துக்கும்...

2024-06-22 16:16:27
news-image

சேஸ் பந்துவீச்சிலும் ஹோப் துடுப்பாட்டத்திலும் அசத்தல்;...

2024-06-22 11:11:48
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடிப்புச் செய்த இலங்கை...

2024-06-22 10:19:13
news-image

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் உதவித்...

2024-06-22 00:37:19
news-image

குவின்டன் டி கொக், டேவிட் மில்லரின்...

2024-06-22 00:06:34
news-image

இணை வரவேற்பு நாடுகள் மேற்கிந்தியத் தீவுகள்...

2024-06-21 21:45:08
news-image

அரை இறுதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியுடன்...

2024-06-21 14:03:31
news-image

கமின்ஸ் ஹெட்- ட்ரிக், வோர்னர் அரைச்...

2024-06-21 11:21:46
news-image

அவுஸ்திரேலியா - பங்களாதேஷ் அணிகள் மோதும்...

2024-06-21 00:57:21
news-image

சூரியகுமார், பும்ரா அபார ஆற்றல்கள்; ஆப்கனை...

2024-06-21 00:10:44