பொதுஜன பெரமுனவும் ஐ.தே.கவும் கடும்போக்கின் உறைவிடம் ஹக்கீம், மனோ காட்டம்

Published By: Digital Desk 3

21 Jun, 2020 | 02:24 PM
image

சிங்கள பௌத்தவாத நிகழ்ச்சி நிரலில் மட்டுமே ஐக்கிய மக்கள் சக்தி பயணிக்க முடியாது. அவ்வாறு பயணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தனியொரு கட்சியல்ல. தனியொரு நபர் சார்ந்ததுமல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அண்மையில் வெளியேறிய மங்கள சமரவீர, அக்கூட்டமைப்பு பொதுஜனபெரமுனவின் நகலாக இருப்பதாகவும் சஜித் பிரேமதாஸவை சூழ கடும்போக்காளர்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். 

அதேபோன்று, தென்னிலங்கை வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அத்தரப்பு கடுமையான சில நிலைப்பாடுகளையும் கையிலெடுக்க தயாராகி வருவதாகவும் அறியக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை தலைவர்களிடத்தில் அதுபற்றி வினவியபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.  அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 

ஐக்கிய மக்கள் சக்தி என்பது தனியொரு கட்சியல்ல. அது கூட்டமைப்பாகும். அதில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைமைகளும் ஒருங்கே அமர்ந்தே தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தனியொருவரின் ஆதிக்கமோ, நிகழ்ச்சி நிரலிலோ செல்லவில்லை. 

இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை உட்பட அக்கூட்டமைப்பு சிறுபான்மை மக்களின் விடயங்களில் இன்னமும் கரிசனையுடன் காத்திரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கையாகவும் இருக்கின்றது. அதுபற்றிய கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். 

குறிப்பாக இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் உட்பட சிறுபான்மையினரின் விடயங்கள் மீது கரிசனை கொள்ளப்பட்டுள்ளது. அதுபற்றி பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் எமது கூட்டணிக்குள் சிங்கள தேசிய, பௌத்த தேசியவாதத்தில் உருவாக்கப்பட்ட சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் இருக்கின்றார்கள். அதற்காக சிங்கள, பௌத்தவாத்த நிகழ்ச்சி நிரலிலேயே ஒட்டுமொத்த கூட்டமைப்பும் செல்கின்றது என்று கூறிவிட முடியாது. தனிப்பட்ட ரீதியில் ஒருசிலர் கருத்துக்களை வெளியிட முடியும். அவர்கள் தமது வாக்கு வங்கியை தக்கவைப்பதற்காக அவ்விதமாக செயற்பட முடியும். ஆனால் தலைமைத்துவ மட்டங்களில் அவ்வாறான நிலைமைகள் இல்லை. 

மேலும், சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் எதிர்கால அரசியல் இலக்குகளை கொண்டிருப்பதனால் அவர்களும் கொள்கையளவில் மாற்றங்களை செய்யவேண்டியது கட்டாயமாகின்றது. இவ்வாறிருக்கையில் பொதுஜனபெரமுனவும் ராஜபக்ஷவினரும் ஒரு அடி பாய்ந்தால் நாங்கள் மூன்றடி பாய்ந்தால் தான் தென்னிலங்கை வாக்குகளை எடுக்க முடியும் என்று கருதுவதே அரசியலில் அபத்தமான விடயமாகும். 

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள ரவிகருணாநாயக்க, தயாகமகே போன்றவர்கள் என்னையும் ஏனைய சிறுபான்மை தலைவர்களையும் இலக்கு வைத்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். தற்போது தமது கட்சி சுத்தமாகிவிட்டதாகவும் உரைக்கின்றார்கள். ஆகவே எமக்கு எதிராக உள்ள சக்திகளான பெரமுனவும், ஐ.தே.கவும் சிங்கள, பௌத்த வாதத்திற்குள் நின்றுகொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படையாகிறது. 

ஐக்கிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் அவ்விதமான நிலைப்பாடொன்றை எடுப்பது மிகக்கடினமாகும். எதிர்காலத்தில் ஆட்சி அமைகின்றபோது அதன் பங்காளிகளாக இருக்கும் நாம் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை தலைவர்களின் ஆதரவு நிச்சயமாக அவர்களுக்கு தேவை. அங்கு எமது பேரம்பேசல் சக்தி உச்ச அளவில் இருக்கப்போகின்றது. ஆகவே கடுப்போக்குவாதத்தினால் அவர்களால் எதனையும் சாதிக்க முடியாதுபோகும் என்றார். 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவிக்கையில், 

முதலாவதாக மங்கள சமரவீர முழுமையாக அரசியலிலிருந்து வெளியேறப்போவதில்லை. நாட்டின் சிவில் சமூக செயற்பாட்டில் தன்னை நிலைநிறுத்தி புதிய பாத்திரத்தை அவர் வகிக்க போகிறார என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். 

இவ்வாறிருக்க, மங்கள சமரவீர,  எமது கூட்டணியில் உள்ள  சம்பிக்க ரணவக்கவை குறி வைத்து, “சிங்கள தீவிரவாதிகள்” எனக்கூறும்போது, ரவி கருணாநாயக்க, தயா கமகே போன்றோர், என்னையும், ரவூப் ஹக்கீமையும், ரிஷாத் பதியுதீனையும் குறிவைத்து தமிழ், முஸ்லிம் தீவிரவாதிகள் ஐ.தே.க.வைவிட்டு விலகி போய் விட்டார்கள் எனக் கூறியுள்ளார்கள்.

இவை எதனை காட்டுகின்றன? தமிழ், முஸ்லிம், சிங்கள தேசியவாத கட்சிகள் இப்போது ஓரணியில் சஜித் பிரேமதாசவுடன் கரங்கோர்த்து கொண்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சேர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் ஒரு பொது உடன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்பு வேறெங்கையும் விட, ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளே இருக்கின்றது,

ஏனெனில், இந்நாட்டை “ஜனநாயக சோஷலிச இலங்கை குடியரசு” என்பதிலிருந்து  “சிங்கள பௌத்த குடியரசு” என மாற்ற திட்டமிடும் கடும் சிங்கள பௌத்த நிலப்பாடுகளை கொண்ட அரசுடன் மோதுகின்றோம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

சம்பிக்க ரணவக்க, காலவோட்டத்தில் கொள்கைகள பலவற்றை மாற்றிக்கொண்டுள்ளார் என்பதை மட்டும் என்னால் இப்போது சொல்ல முடியும். இதை எங்கள் சக முஸ்லிம் கட்சி தலைவர்களும் கவனித்துள்ளார்கள். மேலும் ஐக்கிய மக்கள் சக்தி என்பது, சம்பிக்க ரணவக்க மட்டுமல்ல. அதில் நாமும் இருக்கிறோம். கொள்கைகளை நாமும் கூட்டாகவே தீர்மானிக்கின்றோம்.

மேலும் சம்பிக்க ரணவக்க என்ற ஒருவரை மட்டும் மையமாக வைத்து எமது முடிவுகளை எடுக்க முடியாது. ஆளும் கட்சியை போன்று, ஐ.தே.கவிலும் இனவாதிகள் உள்ளார்கள். ஜே.வி.பியி. லும் உள்ளார்கள். மஹிந்தவை யுத்தம் செய்யும்இடத்துக்கு தள்ளியதே ஜே.வி.பி. தான். சமீப காலம்வரை அதை அவர்கள் மேடைகளில் பெருமையுடன் கூறி வந்தார்கள்.

2007 பெப்ரவரி வரை மங்கள சமரவீரவும் மகிந்தவுடன் அமைச்சராக இருந்தார். அதன்பிறகே அவர் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டார். பின்னரே வெளியில் வந்து வேறு கட்சி அமைத்து எமது எதிரணி கூட்டணியில் சேர்ந்தார். அதற்குள் இங்கே கொழும்பில் வெள்ளைவான் கடத்தல் என்றும், வடகிழக்கில் யுத்தம் என்றும் பெரும் அநீதிகள் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்திருந்தன.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் அப்போதும், இப்போதும் ராஜபக்ஷக்களுடன் நட்பில் இருக்கிறார். ராஜபக்ஷக்கள் தொடர்ந்து ஆட்சியில் இருக்க அவர் மறைமுகமாக எப்போதும் உதவுகிறார். எமது ஆட்சியின் போது ராஜபக்சஷக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுப்பதை  ரணில் தடுத்தே வந்தார். ஆரம்பத்திலேயே ஒழுங்காக சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தால், நிலைமை இந்த அளவுக்கு கைமீறி போய் இருக்காது. இவை எல்ல்வாற்றுகும்  மூல காரணம் ரணில் தான். 

ஆகவே பேரினவாதிகளும், அவர்களுக்கு துணை போகின்றவர்களும் எங்கும் எப்போதும் நீக்கமற நிறைந்துள்ளார்கள். இவர்களுக்கு இடையில்தான் நாம் அரசியல் சுழியோட வேண்டியுள்ளது. நான்தான் எப்போதும் சொல்வேனே. எந்தவொரு பெரும்பான்மை தலைவரையும், கட்சியையும் நம்ப நான் தயார் இல்லை. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இருப்பவர்களில், ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்ற பெரும்பான்மை தலைவருடனும், கட்சியுடனும் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அவ்வளவுதான் என்றார். 

(ஆர்.ராம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலீடு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும்...

2024-12-13 02:13:40
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-13 01:02:13
news-image

'கோட்டாபய - பகுதி 2'ஆக மாறிவிட்டாரா...

2024-12-12 17:28:10
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள...

2024-12-12 21:13:18
news-image

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய...

2024-12-12 17:20:39
news-image

சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி...

2024-12-12 21:12:41
news-image

சபாநாயகரின் “கலாநிதி” பட்டம் தொடர்பான சர்ச்சை...

2024-12-12 17:06:16
news-image

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு...

2024-12-12 21:15:23
news-image

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை :...

2024-12-12 17:04:17
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-12 19:27:14
news-image

மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் உதாரணமாக அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டம்...

2024-12-12 19:23:22
news-image

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு...

2024-12-12 18:11:27