விசேட சுற்றிவளைப்பு 25,912 பேர் கைது : 66 துப்பாக்கிகள் பறிமுதல்

Published By: Digital Desk 3

21 Jun, 2020 | 02:09 PM
image

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 25 ஆயிரத்து 912 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம் மாதம் 6 ஆம் திகதி காலை 6 மணிமுதல் நேற்று முன்தினம் சனிக்கிழமை (20) நள்ளிரவு 12 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த சுற்றிவளைப்புக்களின் போது போதைப் பொருளுடன் 6,420 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 3,551 பேரிடமிருந்து 5 கிலோ 472 கிராம் 941 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

2609 பேர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்களிடமிருந்து 217 கிலோ 474 கிராம் 883 மில்லிகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 758 கிராம் 936 மில்லி கிராம் ஐஸ் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானத்துடன் 5574 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 782 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த 52 பேரும் வெடிமருந்துகளை வைத்திருந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 18 குழல் 12 ரக துப்பாக்கிகள் , 24 கல்கட்டஸ் ரக துப்பாக்கிகள் , 18 ரிபிடர் ரக துப்பாக்கிகள், 5 புதியவகை துப்பாக்கிகள், பிஸ்டோல் , 36 தன்னியக்க தோட்டாக்கள் , மூன்று வாள்கள் , கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 367 கிராம் தொகை வெடி மருந்து , 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 7 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இவை மாத்திரமின்றி பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 5,110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேற்கூறிய குற்றச் செயல்களுக்குள் உள்ளடங்காத வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்தமை தொடர்பிலும் 8,750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51