வற் வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக,கொழும்பில் இன்று காலையில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட போது தெரிவித்துள்ளார்.