கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆப்பிரிக்காவில் சிக்கித்தவித்த 289 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான, விசேட விமானங்கள் மூலம் குறித்த 289 பேரும் ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபிரிக்க நாடுகளான மடகஸ்கர், மொசாம்பிக், உகண்டா, கென்யா, ருவாண்டா மற்றும் தன்சானியாவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆவர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த விமானம், தான்சானியாவிலுள்ள தாரூஸலாமிலிருந்து 289 இலங்கையர்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் பி.சீ. ஆர். பரிசோதனைகளுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM