(செ.தேன்மொழி)

கடந்த 2017 ஆம் ஆண்டு சதோச நிறுவனத்தின் ஊடாக அரசி இறக்குமதி செய்யப்பட்ட போது  இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ரிஷாட் , 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்தன் பின்னர் , பிற்பகல் 4.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறிமை குறிப்பிடத்தக்கது.