முல்லைத்தீவு - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் 20.06 இன்றையநாள், தமது தொடர்போராட்டத்தின் 1200 ஆவது நாளில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு வனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை அரச புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் கைத் தொலைபேசிகளில் புகைப்படம், மற்றும் காணொளிகளை எடுத்து அச்சுறுத்தியிருந்தனர்.

குறிப்பாக கவனயீர்பு இடம்பெறும் இடத்திற்கு மிக அதிகளவான புலனாய்வாளர்கள் வருகைதந்ததுடன், கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு மிகஅருகில் சென்று அச்சுறுத்தும் வகையில் புகைப்படம், மற்றும் காணொளிகளை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.