கட்சிக்காக எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாடும் வேளையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது கட்சியுடன் இணைந்து கொள்வதற்கு அதிகமானோர் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பான யோசனையை எதிர்வரும் வாரம் ஜனாதிபதியிடம் சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாவிடின் பதவி எதிர்பார்ப்பும் தனக்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.