நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமெனவும் மலையகத்தின் மேற்கு சரிவான பகுதிகளில் அவ்வப்போது 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையிலும் உள்ள கடற்பிராந்தியங்களில் சிலவேளைகளில் மணிக்கு 60 கிலோமீற்றராக காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்பதுடன்,திருகோணலைக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றராக அதிகாரிக்கலாம் என்பதால்,  கடற்பிராந்தியங்களில் அவ்வப்போது கொந்தளிப்பும் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.