இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் 30 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மாத்திரம் இன்று 2115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தமிழக பொலிஸார்  கேட்டுக்கொண்டுள்ளதுடன் 12 நாள் ஊரடங்கு தொடர்பான விளக்கம் அளித்து, அறிவுறுத்தல் வழங்கியுள்ள பொலிஸார், எவரும் அலட்சியமாக நடமாட வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். 

தமிழ்நாட்டில் 3 ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இதுவரை 54,000 ஐ தாண்டியது. 

சென்னையில் மாத்திரம் இன்று 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 41 பேர் பலியாகியுள்ளனர். 

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1,630 பேர் குணமடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,449ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 38,000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,327ஆக உயர்ந்துள்ளது.