இந்திய உயர்ஸ்தானிகரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழு சந்தித்து பேச்சு

Published By: J.G.Stephan

19 Jun, 2020 | 07:20 PM
image

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர் சந்தித்து மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்  தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர்களான பிரதமரின் இணைப்புச் செயலாளர்  செந்தில் தொண்டமான், முன்னாள் மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன்  உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானின் யோசனைகள் பிரகாரம் சில வேண்டுகோள்கள் மலையக மக்களுக்காக முன் வைக்கப்பட்டது

அதில் பெருந்தோட்டப் பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

பதுளை, கண்டி மற்றும் ஏனைய பிரதேசங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து அதன் ஊடாக திறமையான மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகளை உருவாக்கும் நோக்கில் புதிய தேவையான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தாதியர் கல்லூரி அமைத்தல். 

வைத்திய முகாமைத்துவ கல்லூரி ஒன்றை அமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் திறமையுள்ள இளைஞர்களை வைத்தியத்துறையிலும் சுகாதாரத்துறையிலும் ஊக்குவித்தல்.

அம்புலன்ஸ் வசதிகளை அதிகரிப்பதுடன் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அவசரமான நேரங்களில் சரியான காலத்திற்கு நோயாளியை கொண்டு செல்லல் போன்ற பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் ஆகிய விடயங்கள் பேசப்பட்டதுடன் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38