(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தலுக்கான முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை மறுதினம் பிரதமர்  தலைமையில் குருநாகலையில் இடம் பெறவுள்ளது.  2020 பொதுத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிதற்கு  முன்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாளை அநுராதபுர ஜய ஸ்ரீ மகா விகாரையில் மத வழிவாடுகளில் ஈடுப்படவுள்ளார்கள்.  

அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா விகாரையில் இடம்பெறவுள்ள சமய நடவடிக்கைகளில் கலந்து கொண்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

2020 பொதுத் தேர்தலுக்காக  ஸ்ரீலங்கா  சுதந்திர பொதுஜன பெரமுனவின் பிரதமர்  வேட்பாளராக குருநாகல் மாவட்டத்தில் இலக்கம் 17 இல் போட்டியிடும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் அலுவலகம்  திறந்து வைக்கப்பட்டு  தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்ளைகளுக்கு சாதகமான முறையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும் நல்லதொரு நாட்டை உருவாக்குவதே ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய தேர்தல் ஆணைக்குழுவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவே ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரங்கள் ஒழுங்கமைப்பட்டுள்ளது.

கொவிட்- 19  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார  தரப்பினர்  அறிவுறுத்தியுள்ள   பாதுகாப்பு  வழிமுறைகளுக்கு முன்னுரிமை  வழங்கப்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்கள் இடம்  பெறவுள்ளன அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள்  மாத்திரமே கூட்டத்தில்  பங்குப்பற்ற முடியும். என பொதுஜன பெரமுன  ஊடகப்பிரிவு  அறிவுறுத்தியுள்ளது.