(எம்.மனோசித்ரா)

கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் பொலிஸாரினால் வழங்கப்பட்ட மோட்டார் வாகன தண்டப்பண பத்திரத்தை கொரோனா தொற்று காரணமாக செலுத்த முடியாமல் போயிருந்தால் குறித்த தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் இம் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தண்டப்பணத்தை நாடு முழுவதிலுமுள்ள எந்தவொரு தபாலகங்களிலும் , உப தபால் அலுவலகங்களிலும் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கமைய தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவடைந்துள்ள நிலையில் தண்டப்பணம் செலுத்துவதற்கான ஆவணத்தை மேலதிக தண்டப்பணத்துடன் செலுத்துவதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.