போட்டி எங்கு நடந்தாலும் உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கவேண்டும் - பஞ்சாப் அணி 

19 Jun, 2020 | 01:20 PM
image

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு  எங்கு நடந்தாலும் அங்கு தங்குவதற்கான  ஹோட்டல் வசதி, உட்கட்டமைப்பு வசதி ஆகியவை முறையாக இருக்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா கோரிக்கை முன்வைத்துள்ளார்.

13 ஆவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவிருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பருவக்காலத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாது போனால் இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபா வருமானத்தை இழக்க நேரிடும் என்பதால், இந்த ஆண்டின் இறுதிக்குள் போட்டியை நடத்தி விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ( பி.சி.சி.ஐ) தீவிரம் காட்டி வருகிறது. உலக இருபதுக்கு 20 போட்டி  ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதால், அந்த காலகட்டத்தில் (ஒக்டோபர், நவம்பர்) ஐ.பி.எல். போட்டியை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.

இந்தப் பருவக்காலத்துக்கான ஐ.பி.எல். போட்டி குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா அளித்துள்ள பேட்டியில், ‘‘தற்போதைய சூழ்நிலையை பார்க்கும்போது, உலக  இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்துவதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்ப்படுகிறது.

அதுபோல் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதும் எளிதான காரியமல்ல. போட்டி நடைபெறும் இடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஐ.பி.எல். போட்டியை முழுமையாக நடத்த பி.சி.சி.ஐ. சகல  முயற்சிகளையும்  எடுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஆனால், போட்டியின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஏனெனில் தற்போதுள்ள சூழ்நிலையை நாங்கள் அறிவோம். ஐ.பி.எல். போட்டிக்கான இடம் மற்றும் அட்டவணையை எளிதில் முடிவு செய்து விட முடியும். போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான அளவுக்கு ஹோட்டல்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஐ.பி.எல். போட்டி நடந்தால் அனுசரணை வழங்க பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. எனவே, அனுசரணையாளர்களை கவர்வதில் எந்தவித சிக்கலும் இல்லை. தற்போதைய கடினமான சூழ்நிலையிலிருந்து வெளியில் வர உலகுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது. எனவே, இந்தப் பருவக்காலத்தில் ஐ.பி.எல். போட்டி நடந்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எனது கருத்தாகும்’’ என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33