கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக உலகக் கிண்ணத்தை விற்றோம் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான வல்லமை இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்காக அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விவாதத்தில் ஈடுபடுவும் தாம் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நான் விளையாட்டு அமைச்சராக இருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள மஹிந்தானந்த அழுத்கமகே, இதனை மிகவும் உறுதியுடன் பொறுப்புடனும் கூறுகின்றேன்.

எனினும் நாட்டின் மதிப்பை கருத்தில் கொண்டு மேலதிக விபரங்களை பகிரங்கப்படுத்தவிரும்பவில்லை எனவும் அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் நான் கிரிக்கெட் வீரர்களை இணைத்துக்கொள்ள மாட்டேன். ஒரு சில தரப்பினரால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.