(எம்.எம்.சில்வெஸ்டர்)
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 3 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கால்பந்தாட்டப் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, விளையாட்டுத்துறை விஞ்ஞான பீடத்தின் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் கால்பந்தாட்ட பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கால்பந்தாட்ட பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ள அனைத்து வீரர்களையும் பி.சீ. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், அனைத்து வீரர்களையும் ஒரே நேரத்தில் பயிற்சிகளை அளிக்காமல் இருப்பதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பெயரிடப்பட்ட 56 வீரர்களிலிருந்து 24 பேர் கால்பந்தாட்ட குழாத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்றுநரான அமீர் அலைஜினின் அறிவுரைகளுக்கு அமைய, பல புதுமுக வீரர்கள் தேசிய குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு கட்டங்களைக் கொண்டதாக அமையவுள்ள கால்பந்தாட்ட பயிற்சி முகாமானது, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுவதுடன், முதல் கட்ட பயிற்சி காலம் 17 நாட்களைக் கொண்டதாகும். அதன் பின்னர் 4 நாள் ஓய்வின் பின்னர் மீண்டும் 17 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமொன்றை நடத்த தற்போதைக்கு திட்டம் வகுத்துள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவிக்கின்றது.
இந்த பயிற்சி முகாமானது கோட்டே, பெத்தகானவிலுள்ள தேசிய கால்பந்தாட்ட அபிவிருத்தி மத்திய நிலையத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM