(நா.தனுஜா)

உலக வங்கி அமைப்பினால் நிதியுதவி வழங்கப்படும் அடையாளங் காணப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் நிலையற்ற அவசர தேவை பின்னூட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக முக்கியத்துவ அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டத்திற்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 நிலைமையின் காரணமாக சுகாதாரத்துறைக்கு அப்பால் பல்வேறு அழுத்தங்களை நாடு எதிர்கொண்டிருப்பதனால் விவசாயத்துறையை மேம்படுத்துதல், கல்வி முறைமையை நடைமுறைப்படுத்துதல், வீட்டிலிருந்து கடமைகளை மேற்கொள்ளும் நடைமுறையொன்றை அமைத்தல், இடர்முகாமைத்துவம் மற்றும் பொது சேவைகளை பயன்படுத்தும் போது நோய் பரவுவதை தடுத்தல் போன்ற விடயங்களுக்கு துரிதமாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக உலக வங்கி அமைப்பினால் வழங்கப்படும் 4 நிதி முதலீட்டு திட்டங்கள் அவசர பின்னூட்டல் தகவல் தொழிநுட்பத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள 56 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியத்தில் மேலே குறிப்பிடப்பட்ட துறைகளில் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.