ஞாயிறு இடம்பெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை - மயூரக்குருக்கள்

17 Jun, 2020 | 09:19 PM
image

இந்த வருடத்தில் வருகின்ற சூரிய கிரகணமானது எதிர்வருகின்ற 21.06.2020 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ மயூரக்குருக்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சூரியகிரகணம் தென்படுகிறது.

இலங்கையில் அது தோன்றும் காலமாக காலை 10 .22 மணிமுதல் பகல் 1.30 மணி வரையான காலப்பகுதியில் இந்தச் சூரிய கிரகணத்தினை நாம் அவதானிக்க முடியும். இக்காலப்பகுதியிலே தெளிவாக தெரிவதுடன் இலங்கையில் வாழும் மக்கள் இதனை உணர்ந்துகொள்ள முடியும்.

சூரிய கிரகணத்தினை நாம் வெற்றுக் கண்ணினால் பார்க்ககூடாது. சூரிய கிரகணத்தினை பார்க்க வேண்டுமாயின் துணியினை நீரில் நனைத்து அதன் ஊடாக சூரியனை நாம் பார்க்கலாம் அல்லது கண்ணாடி கொண்டோ அல்லது நீர் நிலைகளினூடாகவோ அதனைப்பார்க்க முடியும்.

வெற்றுக்கண்ணால் பார்ப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். இந்தக்காலப்பகுதிகளில் கர்பிணிகளாக இருக்கின்ற பெண்கள் இக்காலத்தே வெளியில் திரிவதனையோ அல்லது கிரகணகாலத்தில் சூரியனை பார்ப்பதனையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கிரகணகாலத்தில் சூரியனில் இருந்து வெளியேறுகின்ற புறவூதாக்கதிர்களின் தாக்கம் அவர்களை இலகுவில் தாக்கும் தன்மை கொண்டவை அதனாலேதான் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெளியில் வரக்கூடாது எனக்கூறப்படுகிறது.

இந்தக்காலப்பகுதிகளில் உணவுகள் சமைப்பதனையோ உணவுகளை உட்கொள்வதனையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்.

சமைத்த உணவுகள் இருந்தால் அவற்றை தர்ப்பை புல் கொண்டு மூடிவைத்து கொள்ளுங்கள் கிரகணகாலம் முடிந்ததும் அவற்றை எடுத்து விட்டு உணவுகளை உட்கொள்ளலாம் அல்லது கிரகணகாலம் முடிந்ததும் சமைத்துண்ணலாம்.

இக்காலத்திலே ஆலயங்கள் கிரகணகாலத்தின் முன்னர் பூஜைகள் முடிக்கப்பட்டு அவை மூடப்படும் கிரகணகாலம் முடிந்ததும் அவை பிராயச்சித்தம் செய்யப்பட்டு பூஜைகளுக்காக திறக்கப்படும். இக்காலத்தில் நீர்நிலைகளில் வழிபாடுகள் செய்தல் நன்மை பயக்கும். தர்பணங்கள் மற்றும் பாராயணங்கள் இக்காலத்தே செய்வதால் பலமடங்கு பலனைத்தரும். எனவே அனைவரும் இவற்றைக்கருத்தில் கொண்டு நடந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வவளம் கொழிக்க நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய...

2024-02-27 15:20:20
news-image

தன வரவை அதிகரிக்கும் சித்தர் வழிபாடு

2024-02-26 18:06:13
news-image

தடைகளை அகற்றி தன வருவாயை அதிகரிக்கச்...

2024-02-25 21:22:54
news-image

யாரெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை வழிபடக்கூடாது!?

2024-02-24 14:29:42
news-image

நல்ல பலன்களை அவதானிக்கும் காலக்கணித முறை

2024-02-23 15:56:41
news-image

தடைகளை அகற்றி தன வரவை அதிகரிக்கும்...

2024-02-20 16:53:46
news-image

முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல்...

2024-02-19 18:53:02
news-image

திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும்,...

2024-02-17 16:39:32
news-image

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் திதி...

2024-02-16 17:55:02
news-image

உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும்...

2024-02-14 17:05:33
news-image

வல்லமை தரும் உபாசனை தெய்வ வழிபாடு..!

2024-02-13 16:37:25
news-image

தன ஆக்கர்ஷன மூலிகையை பயன்படுத்தும் வழிமுறை...!

2024-02-12 17:42:51