பதுளை பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

இம்மாத இறுதியில் பாத யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும்,அரசியல் கட்சியல்லாமல் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியாக பலம் பெறுவதாக அவர் மேலும் கூறினார்.

பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகியதன் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

உள்நாட்டு விமான போக்குவரத்துக்காக 15 கோடி ரூபாய்களை செலவிட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.