அடிப்படைவாதிகள், ஊழல்வாதிகளை வைத்து அரசாங்கம் அமைக்கமாட்டோம் : பிரசன்ன ரணதுங்க

Published By: J.G.Stephan

17 Jun, 2020 | 08:16 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனா தொற்று காரணமாக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய நிவாரணங்களை நிதி நிறுவனங்கள் அதனை இல்லாமலாக்கி இருக்கின்றன.

அவ்வாறான நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் அடிப்படைவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு நாங்கள் ஒருபோதும் அரசாங்கம் அமைக்கமாட்டோம்.

அதற்கான தேவையும் எமக்கு ஏற்படாது என சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலில் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பவர்களைக்கொண்ட  அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமே அவரின் வேலைத்திட்டங்களை முன்னெடுச்செல்லலாம்.

அதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று தேவையாகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக்கொண்ட அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொண்டால் ஜனாதிபதயின் திட்டங்களை கொண்டு செல்லலாம்.

அத்துடன் பொதுவாக ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற கட்சிக்கு பொதுத் தேர்தலில் அதனையும்விட குறைவான வாக்குகளே கிடைக்கின்றன.

கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் இதனை விளங்கிக்கொள்ளலாம். 2015 ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் 58 இலட்சம் வாக்குகளை பெற்றோம். ஆனால் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அது 48 இலட்சத்துக்கு குறைவடைந்தது.

அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற 53 இலட்சம் 43 இலட்சத்துக்கு குறைவடையும். அதுவும் தற்போது அவர்கள் இரண்டாக பிளவுபட்டிருப்பதால் அந்த வாக்குகளும் இவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

மேலும்,  ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவால் அவர்கள் அரசாங்கம் அமைப்பது எப்படி போனாலும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை  கூட  ஐக்கிய தேசிய கட்சிக்கோ அதிலிருந்து பிரிந்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கோ பாதுகாத்துக்கொள்ள முடியுமாகுமா என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்துடன் நாட்டில் நிலையான அரசாங்கம் ஒன்று அமையாவிட்டால் நாடு தொடர்ந்து பின்தள்ளப்பட்டும் அபாயம் இருக்கின்றது. அந்த நிலைமை ஏற்படுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். அதனால் விரக்தியுற்றிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் மற்றும் மத்தியஸ்த நிலையில் இருப்பவர்கள் ஜனாதிபதிக்கு நிலையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்கவே இம்முறை வாக்களிப்பார்கள்.

அத்துடன் நாங்கள் அடிப்படைவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு அரசாங்கம் அமைக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்குகின்றோம். அவ்வாறான நிலை ஏற்படாது என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. நல்லாட்சியில் இருந்த சிலர் இன்னும் எமக்கு எதிராக செயற்படுகின்றனர். அதனையே ஜனாதிபதி மத்திய வங்கி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்திருந்தார். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் ஏற்பட்டிருக்கும் தொற்று நோய் நிலைமையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது அதனை செயற்படுத்தாமல் அதிகாரிகள் அரசாங்கத்தை இக்கட்டான  நிலைக்கு தள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு இடமளிக்க முடியாது.

எனவே அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கும்போது, மத்திய வங்கி அதற்கு கடிதம் எழுதிவிட்டு, அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை.  அவ்வாறான மத்திய வங்கிய அதிகாரிகள் தேவையில்லை. கொரோனா தொற்று காரணமாக அரசாங்கம் மக்களுக்கு பல நிவாரணங்களை அளித்தபோதும் அதனை அரச, தனியார் வங்கிகள் நிதி நிறுவனங்கள் இல்லாமலாக்கி இருக்கின்றன. அதனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்தினால் உடனடியாக கண்காணிக்கப்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59