ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் தொடர்ந்து மூன்றாவது தடவையாக ஆண்டுக்கான சிறந்த பொது காப்புறுதி நாமமாக ப்ரேன்ட் ஃபினான்ஸால் அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் ஸ்ரீலங்கா இஇன்ஷுரன்ஸ் நாட்டில் முன்னணி மற்றும் பலம் மிக்க காப்புறுதி நிறுவனங்களுடன் போட்டியிட்டு பெருமைக்குரிய இவ்விருதை தனதாக்கியுள்ளது.

தலைமுறை தலைமுறையாக மக்கள் மத்தியில் சிறந்த நம்பகத்தன்மையையும் தன்னிகரில்லா சேவையையும் தொடர்ந்து பெற்று வந்ததாலேயே இவ்விருது கிடைக்கப்பெற்றுள்ளமைக்கு காரணமாகும்.

வாடிக்கையாளர்களுக்கு பூரண பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை வழங்குவதை இலக்காகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்த ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் பொது காப்புறுதி வகையறாவில்  முன்னிடத்தை பெற்றுள்ளமை அதன் சிறப்பம்சமாகும். 

மோட்டார் வாகன துறையில் சேவை வழங்குநர்களுடன் விசேட ஒன்றிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளல், வங்கி மற்றும் பணக் கொடுக்கல் வாங்கல் வசதிகளை வழங்குபவர்களிடம் ஒன்றிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு இலகு தவணைக் கொடுப்பனவு முறைகளைப் பெற்றுத்தரல், வெவ்வேறு சேவை வழங்குநர்கள் ஊடாக   மேற்கொள்ளக்கூடிய கொடுப்பனவு முறைகள், இணையத்தின் ஊடாக காப்புறுதி தேவைகளை நிறைவேற்றுக்கொள்ளும் வசதி, இலகுவான மற்றும் விரைவான காப்புறுதி மீள செலுத்தல்கள் செயன்முறைகள் மற்றும் விரைவான மதிப்பிடல் என்பன இச்செயற்றிட்டங்களில் உள்ளடங்குபவை.

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் பொது காப்புறுதி துறையில் முன்னணி நாமமாக திகழும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் மோட்டர் ப்ளஸ் வாகன காப்புறுதியானது வாடிக்கையாளர்களுக்காக புதிய காப்புறுதி சேவைகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதோடு உறுதிப்பத்திரம் உடையவர்களுக்காக பிரதிபலன்களைப் பெற்றுத்தரும் மோட்டர் ப்ளஸ் லோயல்ட்டி ரிவோட்ஸ் மற்றும் ரூ.15.8 மில்லியன் பெறுமதியான பரிசுப் பொருட்களை வழங்கிய இலங்கையின் பாரிய வாடிக்கையாளர் ஊக்குவிப்பு நிகழ்ச்சியொன்றில் மோட்டர் ப்ளஸ் ரிவோட்ஸ் பிரதான இடத்தையும் வகிக்கின்றது. 

ஆண்டின் பிரபலமான காப்புறுதி நாமமான ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ்;  நிறுவனம் ரூபா 211 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை கொண்டுள்ளதோடு, ரூபா 116 பில்லியனுக்கும் அதிகமான ஆயுள் காப்புறுதி நிதி, பூரண அரச உடைமை, நாடு முழவதும் பரந்து விரிந்த 158 கிளைகள், 5 தசாப்த காலங்களுக்கும் அதிகமாக பலத்துடன் நடாத்திச் செல்லும் உடைமைகளை மீள அளிக்கும் திறன்,  வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய காப்புறுதி திட்டங்கள், சௌகரியத்தை அடிப்படையாகக் கொண்ட செயன்முறை மற்றும் வளைந்து கொடுக்கக்கூடிய சேவை வசதிகள் என்பன இதற்கு என்றும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் முன்னணியில் இருப்பதற்கான காரணிகளாகும். 

அத்துடன் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் அவசர வேளைகளில் இலங்கையர்களுக்குப் பெற்றுத்தரும் ஒத்துழைப்பு இலங்கையில் பிரபலமான காப்புறுதி நாமமாக மக்களது நம்பகத்தன்மையை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. 

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கொவிட் 19 ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறுபட்ட  செயன்முறைகளை முன்னெடுத்துள்ளதோடு கொவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான செயற்றிட்டங்களை மேற்கொள்ளும் விசேட செயலணிகளுக்கு 200 மில்லி    லீற்றர் கை கழுவும் திரவ போத்தல்கள் 10000 வழங்கியுள்ளதோடு, கொவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு ரூபா 50 இலட்சம் நன்கொடையாக வழங்கியமை,  கொவிட் - 19 க்கு எதிராக முன்னணி வகிக்கும் அரச ஊழியர்களுக்கு பாதுகாப்பான முகக்கவசத்திற்காக   ரூபா 15 இலட்சம்        , நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நகர சபை, மாகாண சபை, மாநகர சபை மற்றும் ஏனைய அரச      நிறுவனங்களில் கிருமிகளை நீக்குவதற்கு தேவையான கிருமிநாசினிகள் 10000 லீட்டர்கள் முகக்கவசம், கைகழுவும் பதார்த்தம் என்பவற்றை நன்கொடையாக வழங்கியது.

பிட்ச் தரப்படுத்தலைக் கொண்ட இலங்கையின் ஒரேயொரு காப்புறுதி நிறுவனமான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ்   மாற்றங்கள் மற்றும் தடைகளைத் தாண்டி இலங்கையில் முதற்தர நாமத்தைக் கொண்டுள்ளது