தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இம்முறை மக்கள் சிறந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் - அனந்தி

Published By: J.G.Stephan

17 Jun, 2020 | 07:13 PM
image

தமிழரசுக் கட்சியினர் தங்களின் சுயலாப அரசியலுக்கு எவ்வாறு என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்களோ அதேபோலவே தற்போது சசிகலா ரவிராஜை பயன்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழ் மக்கள் மாற்றுத்தலைமையான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை பலப்படுத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி  நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியாக தேர்தலில் களமிறங்கியுள்ளது.

இந்த முறை எமக்கு மக்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். பல கோரிக்கையை முன்வைத்து கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று எதை சாதித்தார்கள் என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

எங்களுடைய இன விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகளை அல்லது முன்னாள் போராளிகளை நான் அரசியலுக்கு கொண்டு வர விரும்பியவள். சுமந்திரன் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வந்ததாகக் கூறி இன்றும் தமிழ் அரசியல் கைதிகளாக புனர்வாழ்வு பெற்று அரசியல் கைதிகளாக இருந்த முன்னாள் போராளிகள் இன்றைக்கும் தடுப்பில் இருக்கின்றார்கள்.

ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப் புலிகளுடைய அனுதாப வாக்குகளை பெறுவதற்கு மாறுபட்ட கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்த சுமந்திரன் திடீர் அக்கறை கொண்டுள்ளார். விடுதலைப் போராட்டத்தை  ஏற்றுக்கொள்ளவில்லை . ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிய அதே சுமந்திரன்  தேர்தலுக்காக அரசியல் நாடகம் ஆடி வருகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பவர்கள் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை புறந்தள்ளி நாங்கள் எதுவுமே செய்யமுடியாத நிலை தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பாடத்தை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் புதிய மாற்றுத்தலைமையான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பலப்படுத்த வேண்டும். இம்முறை ஒரு பாடம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் கற்பிக்க வேண்டும்.

தற்போதைய தேர்தலில் சார்ந்துள்ள வாக்கு வங்கியை ஓரளவு சரி செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் ரவிராஜின் மனைவியை களமிறங்கியுள்ளனர்.

இந்த செயற்பாட்டினை பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகின்றது என்றால் நான் அரசியலுக்கு வரும் போது தமிழரசுக் கட்சி என்னை எவ்வாறு கறிவேப்பிலையாக பாவித்தது. அதேபோலவே சசிகலா ரவிராஜிற்கும் நடைபெறலாம் எனவே அவர் அவதானமாக இருக்க வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் நான் இதனை கூறுகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08