பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள்

17 Jun, 2020 | 03:43 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பமாகவுள்ள நிலையில், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் போக்குவரத்து சேவைகளை முகாமைத்துவம் செய்தல் குறித்து நேற்று செவ்வாய்கிழமை கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினுடைய பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து அதிகாரிகள் , தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் , இலங்கை போக்குவரத்துசபை, அகில இலங்கை பாடசாலை சேவை வேன் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட தனியார் போக்குவரத்து சேவை சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதுள்ள சூழலில் அனைத்து தரப்பினரும் ஏதேனுமொரு பின்னடைவுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இவ்வாறான நிலையில் இலாப நோக்குடன் மாத்திரம் செயற்படாது சமூகத்தின் தேவைக்கு முதலிடம் வழங்கி மாணவர்களுக்கு காணப்படும் பிரச்சினைகள் என்ற கண்னோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று இதன் போது கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விசேடமாக சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஆலோசனைகளையும் உள்ளடக்கிய மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.

இதன் போது போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் , பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் நிறைவடையும் நேரங்கள் மூன்று பிரிவுகளாகக் காணப்படுகின்றன. இதனால் தமக்கு மாணவர்களை ஏற்றிச் செல்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் இதனை இரு நேரங்களாக மாற்றுவது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே மாணவர்களை ஏற்றிச் செல்லல் , சமூக இடைவெளியைப் பேணுதல் , வேன் மற்றும் பஸ் என்பவற்றில் கிருமி நீக்கம் செய்தல் , முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுவதற்கு அனைத்து போக்குவரத்து சங்களின் பிரதிநிதிகளும் இதன் போது இணக்கம் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டர்ல் மாத்திரமே...

2024-03-29 12:20:15
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30