தினமும் உயிர் அச்சத்தில் வாழும் கொஸ்லந்த மக்கள் 

Published By: Digital Desk 3

17 Jun, 2020 | 11:02 AM
image

ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொஸ்லந்த மக்கள்தெனிய கீழ்பூனகலை மற்றும் கபரகல  ஆர்னோல் மீரியபெத்த  அம்பராகல ஆகிய தோட்ட பிரிவுகளில்  வாழும் மக்கள்  காட்டு யானைகளினால் பெரும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளனர்.

பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை தோட்டங்களை உரியமுறையில்  பராமரிப்பு செய்யாமையினால்    இன்று பெருந்தோட்டங்கள் காடுகளாகவே உள்ளது இவ்வாறு காடுகளாக்கப்பட்டு கைவிடுவதால்  காட்டு விலங்குகள் பெருந்தோட்ட பகுதிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளது  இதனால் பெருந்தோட்ட பகுதி மக்கள்  பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் சூழல் உருவாகி உள்ளது.  

இந்த கொஸ்லந்த  பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட பகுதி மக்கள்   மாலை தோடக்கம் காலை சூரிய உதயம் வரை பெரும் அச்சத்துடனே வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை காணப்படுகின்றது.  இப்பிரதேச மக்களின் வாழ்வாதரமாக  இருக்கும்  வீட்டுத்தோட்ட பயிர்களும் இந்த காட்டு யானைகளினால் சேதமாக்கப்படுகின்றது. 

இரவு நேரங்களில் அவசரதேவைகளுக்காக நோயாளியை வைத்தியசாலைக்கு ௯ட கொண்டு செல்ல முடியாத நிலை  இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் உருவாகி உள்ளது. இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்களை காட்டுயானைகள்  தாக்கிய சம்பங்களும் பதிவாகியுள்ளது.

இந்த பிரச்சினைகள் குறித்து பல உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும்  எந்த விதமாற்றமும் இடம்பெறவில்லை. காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து    ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொஸ்லந்த மக்கள்தெனிய கீழ்பூனகலை மற்றும் கபரகல  ஆர்னோல் மீரியபெத்த  அம்பராகல ஆகிய தோட்ட பிரிவுகளில்  வாழும்  பிரதேச மக்களை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கேட்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54