(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் நாளை மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த விசேட கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உட்பட ஏனைய உறுப்பினர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் நடத்துவது மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட இருக்கின்றது.
அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கின்றது.
அதனால் பொதுத் தேர்தலை நடத்தும்போது ஏற்படுவதற்கு சாத்தியப்பாடு இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தீவிரமாக கலந்துரையாடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருக்கின்றது.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பாக கலந்துரையாட தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழு வேட்பாளர்களுடன் சந்திப்பொன்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருக்கின்றது.
நாளை 10 மணிக்கு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரய தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM