வியாழன் கிரகத்திற்கு மேல் மின்னும் ஒளிக்கோவை (வீடியோ இணைப்பு)

Published By: Raam

01 Jul, 2016 | 05:41 PM
image

எண்ணற்ற அபூர்வ நிகழ்வுகளை உள்ளடக்கியது இயற்கை. அந்த அதிசய நிகழ்வுகளில் ஒன்று தான் அரோரா எனப்படும் துருவ ஒளி. அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை கிரகத்தின் காந்தப் புலத்தால் ஈர்க்கப்பட்டு அந்த கிரகத்தின் வட அல்லது தென் துருவத்துக்கு தள்ளப்படும்போது இந்த துருவ ஒளி வெளிப்படுகிறது. பூமியிலும் இந்த நிகழ்வு தோன்றுகிறது. 

இந்நிலையில், பூமியைப்போன்று வியாழன்  கிரகத்தின் மீது தோன்றிய துருவ ஒளியை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா படம் எடுத்து வெளியிட்டுள்ளது.குறித்த படம் நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழன், பூமியைவிட பலமடங்கு அதிக கொள்ளளவு கொண்டது. பூமியில் காணப்படும் மின்னல்களை விட இங்கு ஆயிரம் மடங்கு வலுவான மின்னல்கள் உருவாகும். அதேபோல், பூமிக்கு மேலே தோன்றக்கூடிய துருவ ஒளியைவிட ஆயிரம் மடங்கிற்கும் அதிகமான அடர்த்தியுடன் பிரகாசமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

சூரியனிடமிருந்து ஐந்தாவது வளையத்தில் இருக்கும் வியாழனில் திடமான மேற்பரப்பு இல்லாமல், பிரதானமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களையே கொண்டதால், இது வாயுக்கிரகம் என்று அழைக்கப்படுகிறது. திரவ நிலையில் உள்ள உலோகத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் இந்தக் கிரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஹைட்ரஜன் தான் வியாழன் கோளின் தீவிரமான காந்தப் புலத்தை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது. 

தீவிர காந்தப்புலத்தால் உருவான துருவ ஒளிக்கோவை அடங்கிய வீடியோவையும் நாசா வெளியிட்டிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உரையாடல்களை நேரடியாக மொழிபெயர்க்கக்கூடிய ஏர்போட்கள் ;...

2025-03-19 12:17:11
news-image

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 20...

2025-03-15 19:00:33
news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57