இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரோஹித் ஷர்மா தனக்கு பிடித்த இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இதன்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு:

கேள்வி : இந்த ஆண்டில்  உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் அல்லது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த இரண்டில் எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?

பதில் : இரண்டுக்கும்.

கேள்வி : தற்போதைய காலக்கட்டத்தில் எந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை நீங்கள் அதிகமாக ரசிக்கிறீர்கள்?

பதில் : ஜேசன் ரோய் (இங்கிலாந்து), ஸ்டீவன் ஸ்மித்  (அவுஸ்திரேலியா)

கேள்வி : ஊரடங்கு முடிந்ததும் அடுத்தகட்ட திட்டம் என்ன?

பதில் : மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது தான்.

கேள்வி : தோனி குறித்து ஒரு வார்த்தை?

பதில் : ஜாம்பவான்

கேள்வி :இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி குறித்து ஒரு வார்த்தை?

(இந்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் ‘கோஹ்லி குறித்து ஒரு வார்த்தை’ என்று கூறியபடி மூன்று விதமான பொம்மை குறியீடுகளை (ஈமோஜி) பதிவிட்டார். சிரித்தபடி காணப்பட்ட அந்த எமோஜிகளைப் பார்த்து அதற்குரிய வார்த்தையை கண்டுபிடியுங்கள் என்று கூறிவிட்டார்.)

கேள்வி : சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் முச்சதம், சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் - இதில் உங்களது விருப்பம்?

பதில் : இரண்டுமே நடந்தால் சந்தோஷம் தானே....வேறென்ன?

கேள்வி : சென்னை சுப்பர் கிங்ஸ் அணி குறித்து?

பதில் : மிகச்சிறந்த அணி

கேள்வி :சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோரில் உங்களது தெரிவு?

பதில் :  (சிரித்தபடி) நான் சாக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என பதிலளித்தார்.