எனது வீட்டிலிருந்த மடிக்கணிணியை சி.ஐ.டி.யினர் எடுத்துச் சென்றுள்ளனர் - பத்திரிகையாளர் தரிஷா பஸ்ரியன்

15 Jun, 2020 | 10:51 PM
image

கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நான் பயன்படுத்திய மடிக்கணிணியை நீதிமன்ற உத்தரவின்றி எடுத்துச் சென்றுள்ளதாக சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியன் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாடொன்றில் வசித்துவரும் நிலையிலேயே அவரது மணிக்கணிணியை இவ்வாறு எடுத்துச் சென்றுள்ளதாக தரிஷா பஸ்ரியன் அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவுடன் அவர் ஒரு அறிக்கையொன்றையும் இணைத்துள்ளார்.

அதில், 

ஜூன் 9 ம் திகதி சி.ஐ.டி.யினர் எனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியுடன் சென்றுள்ளனர்.

எனது படுக்கை அறை, எனது மேசை நான் பணிபுரிய பயன்படுத்தும் இடம் என அனைத்தையும் அவர்கள் சோதனையிட்டுள்ளனர். படங்களை எடுத்துள்ளனர். 

எனது கணிணியை கண்டுபிடித்த அவர்கள் அதனை எடுத்துச் சென்றுள்ளனர். எனது மடிக்கணிணியை எடுத்தமைக்கான ஆவணத்தினையும் வழங்கியுள்ளனர்.

எனது வீட்டில் வசிப்பவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

நான் எந்த விசாரணை குறித்தும் பொருத்தமான அமைப்புடன் ஒத்துழைக்க தயராக உள்ளேன்.

எனது மடிக்கணிணியை சிஐடியினர் ஆராய்ந்தாலும், என்மீது குற்றச்சாட்டும் அளவிற்கு அவர்களிற்கு எதுவும் கிடைக்காது என நான் உறுதியாக நம்புகின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள்...

2025-03-16 16:04:14
news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18