பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் மீண்டும் இஸ்லாமாபாத்திலுள்ள இந்தியத் தூதரகத்திற்க்கு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இரு இந்திய தூதரக அதிகாரிகளும் சென்ற வாகனம் நபரொருவர் மீது மோதியதால் குறித்த இரு அதிகாரிகளையும் மக்கள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.