பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவரின் உறவினர்கள் விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடிகரின் மரணம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸார்,  ‘ஆறு மாத காலமாக சுஷாந்த் சிங் மன அழுத்தத்துக்கான சிகிச்சையில் இருந்துவந்துள்ளார்.

Sushant Singh Rajput, Indian actor, found dead in his Mumbai home ...

அவருடைய உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வுகள் தற்கொலை என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதுவரையில், தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள், அவரது உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை இப்போது நிறைவடைந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சுஷாந்தின் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருளை கண்டறிய பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன. சுஷாந்த்தின் இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாட்னாவிலிருந்து மும்பைக்கு வந்து அவரது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந் நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து பேசியுள்ள அவரின் தாய் மாமா,

“ அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நாங்கள் நினைக்கவில்லை, அவரது மரணத்தின் பின்னணியில் ஒரு சதி இருப்பதாக தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Sushant Singh Rajput, Bollywood star, dies aged 34 | India | The ...

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த 34 வயதுடைய சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில் அவரது உறவினர்கள் இது  ஒரு கொலை இதற்கு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.